Trauma Registry Staff Nurse Recruitment 2026: தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் (TNHSRP), பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் Trauma Registry Staff Nurse (செவிலியர்) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 27.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்.
Table of Contents
முக்கிய விவரங்கள் – Trauma Registry Staff Nurse Recruitment 2026
| விவரம் | தகவல் |
|---|---|
| திட்டம் | தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) |
| துறை | மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் |
| பணியிடம் | Trauma Registry – Staff Nurse |
| காலியிடம் | 1 |
| சம்பளம் | ரூ.18,000/- மாதம் |
| வயது வரம்பு | 01.08.2026 அன்று 40 வயதுக்குள் |
| விண்ணப்பிக்கும் கடைசி நாள் | 27.08.2026 மாலை 5.00 மணி |
| விண்ணப்பிக்கும் முறை | நேரில் / Speed Post |
கல்வித்தகுதி – Trauma Registry Staff Nurse Recruitment 2026
Trauma Registry – Staff Nurse பணிக்கு விண்ணப்பிக்க, செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் செவிலியர் பட்டயச்சான்று அல்லது இளங்கலை செவிலியர் படிப்பு அடிப்படையிலான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – Trauma Registry Staff Nurse Recruitment 2026
விண்ணப்பதாரர்களின் வயது 01.08.2026 அன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
தேர்வு செய்யப்படும் Trauma Registry Staff Nurse பணியாளருக்கு மாதம் ரூ.18,000/- சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்:
- விண்ணப்பப் படிவம்.
- விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- கல்வித்தகுதி மற்றும் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள்.
- பிறந்த தேதிக்கான சான்றிதழ் / பத்தாம் வகுப்பு சான்றிதழ்.
- செவிலியர் பட்டயச் சான்று அல்லது பட்டப்படிப்பு சான்றிதழ்.
- இருப்பிடச் சான்று மற்றும் தேவையான பிற சான்றுகள்.
அசல் ஆவணங்கள் நேர்காணல் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள Application Form-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் பின்வரும் விவரங்கள் கேட்கப்படுகின்றன:
- விண்ணப்பதாரரின் பெயர்
- தந்தையின் பெயர்
- பிறந்த தேதி மற்றும் வயது
- கல்வித்தகுதி மற்றும் பெற்ற மதிப்பெண் சதவீதம்
- தற்போதைய முகவரி
- நிரந்தர முகவரி
- சமூகப் பிரிவு
- ஆதார் அட்டை எண்
- தொலைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இடம்
மருத்துவக் கண்காணிப்பாளர்,
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை,
பத்மநாபபுரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.
விண்ணப்பங்கள் 27.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2026
முக்கிய நிபந்தனைகள்
- இப்பணியானது தற்காலிகமானது என்றும், எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தப்படலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மருத்துவமனை கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது.
- விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நேரத்திற்குள் விண்ணப்பம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு
இந்த ஆட்சேர்ப்பில் ஒரே ஒரு Trauma Registry Staff Nurse பணியிடம் மட்டுமே உள்ளது. எனவே செவிலியர் கல்வித்தகுதி மற்றும் குறிப்பிடப்பட்ட வயது வரம்பிற்குள் உள்ள தகுதியானவர்கள் காலக்கெடுவை தவறவிடாமல் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2026 – மாலை 5.00 மணி.
விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் குறிப்பிட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| தனியார் வேலைகள் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
