TNSTC Driver and Conductor Exam: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Table of Contents
TNSTC Driver and Conductor Exam Overview
| நிறுவனம் | தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் |
| விளம்பர எண் | NA |
| பதவியின் பெயர் | ஓட்டுநா், நடத்துநா் |
| சம்பளம் | – |
| வேலை பிரிவு | மாநில அரசு வேலைகள் |
| மொத்த காலியிடங்கள் | 3274 காலிப்பணியிடங்கள் |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
போக்குவரத்துக் கழகங்களின் நிலவரம்
தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், 10,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
2015-க்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக அரசு பதவியேற்றதையடுத்து, சில காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதனுடன், கருணை அடிப்படையிலான வாரிசு நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோட்ட வாரியாக பணியிடங்கள் விபரம்:
- மாநகர் போக்குவரத்துக் கழகம் – 364 பணியிடங்கள்
- விரைவு போக்குவரத்துக் கழகம் – 318
- விழுப்புரம் – 322
- கும்பகோணம் – 756
- சேலம் – 486
- கோவை – 344
- மதுரை – 322
- திருநெல்வேலி – 362
- மொத்தம்: 3,274 பணியிடங்கள்
விண்ணப்ப முடிவுத் தேதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு ஏப்ரல் 21, 2025 அன்று முடிவடைந்தது.
எழுத்துத் தேர்வு
மேற்கண்ட பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பதாரா்களுக்கு ஜூலை 27-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு விவரங்கள்:
- தேர்வு தேதி: ஜூலை 27, 2025 (ஞாயிறு)
- வினாத்தாள்: கடந்த முறையைப் போலவே அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
- தேர்வு மையங்கள்:
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகமும் அடங்கும்.
நுழைவுச்சீட் பதிவிறக்கம்
இதற்கான நுழைவுச்சீட்டை ஜூலை 21 முதல் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியீடு:
📅 ஜூலை 21, 2025 முதல்
🌐 இணையதளம்: www.arasubus.tn.gov.in
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு விவரங்களை பயன்படுத்தி இந்த இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
தேர்வு விதிமுறைகள்:
- தேர்வு முறையில் பொதுத் திறன், துறை சார்ந்த அறிவு, பாதுகாப்பு விதிகள், போக்குவரத்து சட்டங்கள் ஆகியவை அடங்கும்.
- தேர்வுக்கான ஹால் டிக்கெட் இவை வெளியிடப்படும் தேதிக்கு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுக்குப் பின்:
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுநா் பணிக்கு வாகன இயக்கத்திறன் (driving test) தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இந்தத் தேர்வை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் டிரைவிங் டெஸ்ட் (ஓட்டுநர்களுக்காக) ஆகியவை நடத்தப்படும். இது ஒரு மிக முக்கியமான வாய்ப்பு என்பதால், விண்ணப்பதாரர்கள் உரிய திட்டமிடலுடன் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
🔔 மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்: tnstc.in
இதே போன்ற அரசு வேலை அறிவிப்புகளுக்கான உடனடி தகவலுக்கு உங்கள் www.jobstamilnadu.com இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்!
