Tamil Nadu Grama Bank Recruitment 2026: தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2026: ஊரக வங்கிகளில் 13,706 காலியிடங்கள் | Any Degree தகுதி | மாதம் ரூ.35,000 சம்பளம்!

Tamil Nadu Grama Bank Recruitment 2026: வங்கித் துறையில் வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection – IBPS) சார்பில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிராந்திய கிராம வங்கிகளில் (Regional Rural Banks – RRBs) மொத்தம் 13,706 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆட்சேர்ப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant – Multipurpose), அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் (Officer Scale-I), அதிகாரி நிலை-II / மேலாளர் (Officer Scale-II) மற்றும் அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர் (Officer Scale-III) உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 464 காலியிடங்கள் உள்ளன. பதவிக்கு ஏற்ப Any Degree முதல் குறிப்பிட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு, CA, MBA மற்றும் பணி அனுபவம் வரை கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியைப் பொறுத்து சுமார் ₹35,000 முதல் ₹80,000 வரை மாத சம்பளம் கிடைக்கக்கூடும்

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 01.09.2026 முதல் 21.09.2026 வரை IBPS அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தக் கட்டுரையில் IBPS RRB Recruitment 2026 தொடர்பான காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், வயது தளர்வு, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம், முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பார்க்கலாம்.

Tamil Nadu Grama Bank Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம்தகவல்கள்
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS) / வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
ஆட்சேர்ப்புCRP RRBs XV
பணிகள்அலுவலக உதவியாளர், அதிகாரி நிலை-I, அதிகாரி நிலை-II, அதிகாரி நிலை-III
மொத்த காலியிடங்கள்13,706
கல்வித் தகுதிAny Degree / பதவிக்கேற்ப குறிப்பிட்ட தகுதி
சம்பளம்₹35,000 – ₹80,000 வரை
விண்ணப்ப முறைஆன்லைன்
விண்ணப்ப தொடக்கம்01.09.2026
கடைசி தேதி21.09.2026
பணியிடம்தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.ibps.in/

Tamil Nadu Grama Bank Recruitment 2026 – காலியிட விவரங்கள்

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (Regional Rural Banks – RRBs) 13,706 Office Assistant, Officer Scale-I, II, III காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி – தமிழ்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (பல்நோக்கு)/Office Assistant (Multipurpose)8,183
அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் (Officer Scale-I (Assistant Manager))4,256
அதிகாரி நிலை-II / மேலாளர் (Officer Scale-II (Manager))1,066
அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர் (Officer Scale-III (Senior Manager))220
மொத்தம்13,706

தமிழ்நாடு கிராம வங்கி – 464 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் இந்த ஆட்சேர்ப்புக்கான பணியிடங்கள் Tamil Nadu Grama  Bank (தமிழ்நாடு கிராம வங்கி) மூலம் உள்ளன.

பதவி – தமிழ்Post Name – Englishகாலியிடங்கள்
அலுவலக உதவியாளர்Office Assistant244
அதிகாரி நிலை-I / உதவி மேலாளர்Officer Scale-I90
அதிகாரி நிலை-II / மேலாளர்Officer Scale-II82
அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்Officer Scale-III48
மொத்தம்Total464

இதனால் தமிழ்நாடு வங்கி வேலைவாய்ப்பு 2026 தேடும் பட்டதாரிகள் இந்த ஆட்சேர்ப்பை கவனத்தில் கொள்ளலாம்.

கல்வித் தகுதி

தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு பதவியைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும். குறிப்பாக Office Assistant மற்றும் Officer Scale-I பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree in any discipline பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி – தமிழ்கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் (Office Assistant)Any Degree
அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் (Officer Scale-I)Any Degree; IT, Forestry, Law, Marketing, Agriculture, Economics, Accountancy, Management, Finance உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் Degree/Diploma பெற்றவர்களுக்கு முன்னுரிமை
அதிகாரி நிலை-II / மேலாளர் – General Banking Officer (Officer Scale-II)Any Degree + குறைந்தது 50% மதிப்பெண்கள் + தேவையான வங்கி அனுபவம்
அதிகாரி நிலை-II – IT Officer (Officer Scale-II)IT / Computer Science / Electronics தொடர்பான Degree + தேவையான அனுபவம்
அதிகாரி நிலை-II – CA (Officer Scale-II)Chartered Accountant (CA) + தேவையான அனுபவம்
அதிகாரி நிலை-II – Law Officer (Officer Scale-II)Law Degree + தேவையான அனுபவம்
அதிகாரி நிலை-II – Treasury Manager (Officer Scale-II)CA / MBA Finance + தேவையான அனுபவம்
அதிகாரி நிலை-II – Marketing Officer (Officer Scale-II)MBA Marketing + தேவையான அனுபவம்
அதிகாரி நிலை-II – Agriculture Officer (Officer Scale-II)Agriculture தொடர்பான Degree + தேவையான அனுபவம்
அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர் (Officer Scale-III)Any Degree + தேவையான வங்கி / நிதி நிறுவன அனுபவம்

குறிப்பு: Officer Scale-II மற்றும் Officer Scale-III பதவிகளுக்கு குறிப்பிட்ட பிரிவின்படி கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் கட்டாயமாக இருக்கலாம்.

வயது வரம்பு விவரங்கள்

வங்கி பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி – தமிழ்வயது வரம்பு
அலுவலக உதவியாளர்18 – 28 வயது
அதிகாரி நிலை-I / உதவி மேலாளர்18 – 30 வயது
அதிகாரி நிலை-II / மேலாளர்21 – 32 வயது
அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்21 – 40 வயது

சம்பள விவரம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS RRB வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பதவி மற்றும் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.

பதவி – தமிழ்மாத சம்பளம் – சுமார்
அலுவலக உதவியாளர் (Office Assistant (Multipurpose))₹35,000
அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் (Officer Scale I (Assistant Manager))₹60,000
அதிகாரி நிலை-II / மேலாளர் (Officer Scale-II (Manager))₹75,000
அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர் (Officer Scale-III (Senior Manager))₹80,000

இதனுடன் சம்பந்தப்பட்ட வங்கி விதிமுறைகளின்படி DA, HRA மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கக்கூடும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர் பிரிவுகட்டணம்
SC / ST / PwBD / Ex-Servicemen₹175
மற்ற அனைத்து பிரிவினரும்₹850
கட்டணம் செலுத்தும் முறைஆன்லைன்

முக்கிய தேதிகள் Tamil Nadu Grama Bank Recruitment 2026

நிகழ்வுதேதி
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்01.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி21.09.2026
Pre-Exam Training (PET)நவம்பர் 2026
Preliminary Examinationநவம்பர் / டிசம்பர் 2026
Preliminary Resultடிசம்பர் 2026 / ஜனவரி 2027
Main / Single Examinationடிசம்பர் 2026 / ஜனவரி 2027

Tamil Nadu Grama Bank Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?

IBPS RRB கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in-க்கு செல்ல வேண்டும். பின்னர் கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம்:

  1. IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் ibps.in திறக்கவும்.
  2. CRP RRBs XV  Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
  3. விண்ணப்பிக்க விரும்பும் Office Assistant / Officer Scale-I / Officer Scale-II / Officer Scale-III பதவியைத் தேர்வு செய்யவும்.
  4. Click Here for New Registration என்பதைத் தேர்வு செய்யவும்.
  5. பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யவும்.
  6. பெறப்படும் Registration Number மற்றும் Password-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
  7. கல்வித் தகுதி, வயது, முகவரி, Category உள்ளிட்ட விவரங்களைச் சரியாக உள்ளிடவும்.
  8. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  9. பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  10. விண்ணப்பத்தை முழுமையாகச் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  11. விண்ணப்பப் படிவத்தை Download / Print செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்ளவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தனியார் வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

Leave a Comment