Atal Pension Yojana (APY): அடல் பென்ஷன் யோஜனா என்பது இந்திய அரசால் 2015–2016 ல் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். அமைப்புசாரா துறையில் உள்ள தனிநபர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது செயல்படுத்தப்பட்டது. ஓய்வூதியம் என்பது மக்கள் வேலை செய்ய இயலாத போது மாதந்திர வருமானம். பெறுவதைப் போன்றதாகும். இந்தத் திட்டம் இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தால் (PFRDA) ஒழுங்குபடுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.