IBPS RRB Clerk Recruitment 2026: பிராந்திய ஊரக வங்கிகளில் (Regional Rural Banks – RRBs) Office Assistants (Multipurpose) மற்றும் Officers Scale-I, Scale-II, Scale-III பணியிடங்களுக்கான CRP RRBs XIV ஆட்சேர்ப்பு அறிவிப்பை Institute of Banking Personnel Selection (IBPS) வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் Regional Rural Banks-ல் பணியில் சேர வாய்ப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டில் Tamil Nadu Grama Bank இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையில் பங்கேற்கிறது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: IBPS RRB Clerk Recruitment 2026
| விவரம் | தகவல் |
|---|---|
| ஆட்சேர்ப்பு அமைப்பு | Institute of Banking Personnel Selection (IBPS) |
| ஆட்சேர்ப்பு | CRP RRBs XIV |
| பணியிடங்கள் | Office Assistant, Officer Scale-I, II & III |
| பணியிட வகை | Group A & Group B |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| விண்ணப்ப தொடக்கம் | 01.09.2026 |
| கடைசி தேதி | 21.09.2026 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ibps.in |
பணியின் விவரங்கள்: IBPS RRB Clerk Recruitment 2026
CRP RRBs XIV அறிவிப்பில் பல்வேறு மாநிலங்களில் உள்ள RRB-களுக்கான பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கான Tamil Nadu Grama Bank-ல்:
- Office Assistant (Multipurpose) – 468 பணியிடங்கள்
- Officer Scale-I – 200 பணியிடங்கள்
- Officer Scale-II – General Banking Officer – 0
- Officer Scale-II – IT – 12 பணியிடங்கள்
- Officer Scale-II – CA – 2 பணியிடங்கள்
- Officer Scale-II – Law – 0
- Officer Scale-II – Treasury Manager – 0
- Officer Scale-II – Marketing Officer – 4 பணியிடங்கள்
என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் indicative/எதிர்பார்க்கப்படும் காலியிடங்களாகும். இறுதி provisional allotment, RRB-கள் IBPS-க்கு தெரிவிக்கும் உண்மையான காலியிடங்களின் அடிப்படையில் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டிற்கான பங்கேற்கும் RRB ஆக Tamil Nadu Grama Bank, Salem குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தேவையான உள்ளூர் மொழி தமிழ் ஆகும்.
Office Assistant மற்றும் Officer Scale-I பணிகளுக்கு உள்ளூர் மொழித் திறன் முக்கியமான தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
கல்வித்தகுதி:
Office Assistant (Multipurpose)
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், சம்பந்தப்பட்ட RRB நிர்ணயித்துள்ள உள்ளூர் மொழியில் திறமை பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்க தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Officer Scale-I – Assistant Manager
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Information Technology, Management, Law, Economics, Accountancy உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Officer Scale-II – General Banking Officer
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், Bank அல்லது Financial Institution-ல் Officer ஆக குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
Officer Scale-II – Specialist Posts
- IT Officer, Chartered Accountant, Law Officer, Treasury Manager, Marketing Officer மற்றும் Agricultural Officer போன்ற சிறப்பு பணியிடங்களுக்கு தனித்தனி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Officer Scale-III – Senior Manager
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Bank அல்லது Financial Institution-ல் Officer ஆக குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள்.
- விண்ணப்பதாரர் 02.07.1996க்கு முன்னும், 01.07.2004க்கு பின்னும் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
- All Other Candidates: Rs.850
- SC/ST/PWD: Rs.175
முக்கியமான தேதிகள்:
| நிகழ்வு | தேதி / காலம் |
|---|---|
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | 01.09.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 21.09.2026 |
| விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் காலம் | 01.09.2026 – 21.09.2026 |
| Pre-Exam Training | நவம்பர் 2026 |
| Preliminary Exam | நவம்பர் / டிசம்பர் 2026 |
| Preliminary Result | டிசம்பர் 2026 / ஜனவரி 2026 |
| Main / Single Exam | டிசம்பர் 2026 / பிப்ரவரி 2026 |
| Officer Interview | ஜனவரி / பிப்ரவரி 2026 |
| Provisional Allotment | பிப்ரவரி / மார்ச் 2026 |
மேற்கண்டவை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள tentative schedule ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது:
- IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- CRP for RRBs பகுதியைத் தேர்வு செய்யவும்.
- Office Assistants அல்லது Officers Scale-I/II/III தொடர்பான Apply Online இணைப்பைத் தேர்வு செய்யவும்.
- New Registration செய்யவும்.
- தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்களை உள்ளிடவும்.
- புகைப்படம், கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை மற்றும் Handwritten Declaration உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை Online முறையில் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை Final Submit செய்து, Application Form மற்றும் e-Receipt-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
| தனியார் வேலைகள் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of IBPS RRB Clerk Recruitment 2026
How many vacancies are to be filled for IBPS Notification 2026?
Ans: Meny Vacancies apply now
What is the qualification for IBPS Notification 2026?
Ans: Any Degree
What is the mode of application for the IBPS Notification 2026?
Ans: Online
What is the Last Date for IBPS Recruitment 2026?
Ans: 21-09-2026
